• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு காளைபிடி வீரர்கள்12 பேருக்கு காயம்..,

ByKalamegam Viswanathan

Jul 20, 2026

விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில்3 வது ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன.

மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடு பிடி வீரர்கள் பங்கேற்று தங்களது தமிழ் வீரவிளையாட்டு திறமைகளை மைதானத்தில் அரங்கேற்றி பல்வேறு மஞ்சுவிரட்டு காளைகளை போராடி அடக்கினர்.

சற்றும் சளைக்காமல் மாடுபிடி வீரர்களுக்கு இணையாக மஞ்சுவிரட்டு காளைகள் சீறிப்பாய்ந்து 13 மாடுபிடி வீரர்களை பதம் பார்த்தது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் முன்னாள் எம்எல்ஏ கதிரவன், எம்விபி ராஜா, வடமாடு மஞ்சு விரட்டுபோட்டியினை தொடங்கி வைத்தனர். இதில் இப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியினை கண்டுகளித்தனர் விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.