• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் பிரதமர் வேட்பாளர் மனு ஏற்பு

ByG.Suresh

Mar 28, 2024

காமெடிக்கு அளவே இல்லாம அள்ளிவிடும் சுயட்சை வேட்பாளர்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தவர் புதுக்கோட்டை மாவட்டம் மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
பரிசீலனை முடிந்து பழனியப்பன் மனு ஏற்றுக் கொண்டதை அடுத்து வெளியே வந்து ரகசியத்தை உடைத்து செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சுயட்சையாக போட்டியிடும் அனைவரும் ஒரு குழு அமைத்து பேசி முடிவு செய்துள்ளதாகவும், தான் தான் பிரதமர் வேட்பாளர் என்றும், பிஜேபி காங்கிரசுக்கு மாற்றாக தங்கள் அணி மாறப்போகிறது என்றார்.


ஒவ்வொரு தொகுதியிலும் பத்துக்கு மேற்பட்ட சுயேச்சைகள் போட்டிட்டு ஆதரவு இல்லாம பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக பேசி தனிமரம் தோப்பாகாது ஒண்ணா போன புரட்சி ஏற்படும் என்று முடிவு செய்து இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கோம் என்றார். இதை ஏன் முன்பே சொல்லாத ரகசியத்தையும் சொன்னார் விலை பேசிடுவாங்கனு ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொல்கிறார்.

தேர்தல் களத்தில் சுயட்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் ஏதாவது பண்ணுவார்கள். ஆனா சிவகங்கை சுயட்சை வேட்பாளர் பழனியப்பன். மௌனத்தை கலைத்து ரகசியத்தை உடைத்து தன்னை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லியும் தங்களுடைய தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித்தரும் என்றும் கூறியது அங்கு இருந்தவர்களிடம் சிரிப்பலைகளை உருவாக்கியது.