• Thu. Apr 24th, 2025

டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம்!

Byஜெ.துரை

Mar 24, 2025

பெண்களுக்கான 2500 உதவித்தொகை எங்கே? டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி சட்டப்பேரவையின் 5 நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் போது பெண்களுக்கு மாதம்தோறும் 2500 உதவித் தொகையாக வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் அந்த வாக்குறுதியை பாஜக இன்னும் நிறைவேற்ற வில்லை என எதிர்க் கட்சியான ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை முன்வைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு மாதம் 2500 எப்போது கிடைக்கும் என்ற பதாகைகளை ஏந்தியபடி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி,

பட்ஜெட் கூட்டத்துடன் இந்த தொடங்கும் நிலையில் மக்களுக்கு பாஜக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டார்.

பெண்களுக்கு உதவி தொகை இன்னும் வழங்கப்படாத ஒருபுறம் இருக்க இந்த திட்டத்திற்கான பதிவே இன்னும் தொடங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அதிசி இந்த முதல் வாக்குறுதியை தகர்த்ததன் மூலம் டெல்லி பெண்களை பாஜக வஞ்சித்து விட்டதாகவும் பட்ஜெட்டில் டெல்லி மக்களுக்கு மேலும் ஏமாற்றம் இருக்காது எனவும் தங்கள் நம்புவதாக குறிப்பிட்டார்.