• Thu. Apr 18th, 2024

திருப்பரங்குன்றத்தில் ஆடி அமாவாசையில் அரோகரா கோசத்தோடு.., அஸ்திர தேவர்க்கு சிறப்பு அபிஷேகம் !

Byதரணி

Jul 28, 2022

ஆறுபடைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு (கையில் ,ருக்கும் ஆயுதம்) ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் முருகன் கையில் இருக்கும் அஸ்திர தேவர்க்கு தமிழ் மாதம் முதல் தினத்திலும் அமாவாசை தினத்திலும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இது போன்று இன்று ஆடி அமாவாசை என்பதால் அஸ்திர தேவரை இன்று காலை முருகன் கோவிலிலிருந்து கைசப்பரத்தின் மூலம் அஸ்திர தேவரை சரவண பொய்கைக்கு எடுத்து சென்று நீராற்றி சிறப்பு அபிஷேகங்களும் தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றது.

பின்னர் சரவண பொய்கையின் மேல் குடிகொண்டிருக்கும் சண்முகர் எதிரே வைத்து அஸ்திர தேவர்க்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதை காண்பதற்கு பக்தர்கள் ஏரோளமனோர் குவிந்து அரோகரா என்று கோசமிட்டு அஸ்திர தேவரை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *