• Fri. Apr 18th, 2025

முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு..,

ByP.Thangapandi

Apr 9, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபம் மற்றும் முருகன் கோவில் முன்பு பாஜக துவங்கப்பட்ட தினம் மற்றும் மும்மொழி கொள்கை, மத்திய பட்ஜெட் குறித்த தெருமுனை கூட்டம் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கதளி நரசிங்க பெருமாள்,

உசிலம்பட்டி நகரில் தேசிய தலைவர் நேதாஜி சுபாசு சந்திரபோஸ் சிலை அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனை மேம்படுத்த வேண்டும், கண்மாய் சீர்படுத்தப்பட்டு நல்ல நீர்த்தேக்க நிலையாக சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும், உசிலம்பட்டி நகரம் சுகாதாரமான நகரமாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.,

மும்மொழி கல்வி கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்தி திணிக்கப்படுவதாக ஒரு பொய்யான ஒரு குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்கிறார்.,

ஆனால் எந்த இடத்திலும் மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமாக்கப்படவில்லை, மூன்றாவது மொழி என்பது தெலுங்காக இருக்கலாம், மளையாளமாக இருக்கலாம், கன்னடமாக இருக்கலாம் எந்த ஒரு இந்திய மொழியாகவும் இருக்கலாம் அந்த வரிசையில் இந்தி-யாகவும் இருக்கலாம் அல்லது அந்நிய மொழியாக உலக மொழியாகவும் இருக்கலாம்.,

இந்தி தான் என சொல்லவில்லை, இதை நமது முதல்வர் நிரூபித்தார் என்றால் நாங்கள் அவருக்கு 1 கோடி பரிசாக வழங்க தயார் என்று சொல்லியிருக்கிறோம்.,

ஆளுநர் கிடப்பில் போட்ட 10 சட்ட மசோதா ஒப்பதல் அளிக்கப்பட்ட சம்பவம் விவாதிக்க வேண்டிய ஒன்று, இதில் ஆளுநர் தரப்பில் சரியான விளக்கம் கொடுக்காமல் விட்டுவிட்டார்களோ என்கின்ற கருத்தும் இருக்கிறது.,

உச்சநீதிமன்றத்தில் உள்ள தனி அமர்வில் மீண்டும் விவாததிற்கு கொண்டு வர வேண்டிய விஷயமாக பார்க்கிறேன்.,

பாஜக மாநில தலைவர் விவகாரத்தில் அகில இந்திய தலைமை நிறைய கருத்துக்களை சேகரித்து வருகிறார்கள், தொண்டர்கள் கருத்து, நிர்வாகிகள் கருத்து, உயர்மட்ட நிர்வாகிகள் கருத்துகளை அகில இந்திய தலைமை உள்வாங்கி கொண்டிருக்கிறார்கள்.,

அவர்களின் ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் ஜனநாயக முறையில் மாநில தலைவரை அறிவிப்பார்கள், அப்படி ஒரு விதிமுறை இருப்பதால் இந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம்.

பொதுவாக இரண்டு முறை தொடர்ச்சியாக தலைவராக இருக்க முடியும் அந்த வரிசையில் அண்ணாமலை கூட இருக்கலாம்., அல்லது அகில இந்திய தலைமை அறிவிக்கும் இன்னொரு தலைவர் கூட மாநில தலைவராக வரலாம்.

யார் தலைவராக வந்தாலும் தமிழக பாஜக ஒரு வந்தே பாரத் ரயில் வேகத்தில் தொடர்ந்து அந்த தலைமையை ஏற்று பணி செய்வோம். அகில இந்திய தலைமை எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள கூடிய கட்சியாக பாஜக இருக்கிறது, என பேட்டியளித்தார்.