• Fri. Dec 13th, 2024

விருதுநகரில் பெண் ஒருவர் கம்பியால் அடித்துக் கொலை: வாலிபர் கைது..!

Byவிஷா

Jul 28, 2022

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பெரிய பேராலியைச் சேர்ந்தவர் கோபால்.இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிகிறார். இவரது மனைவி சரஸ்வதி. சுருளிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடப்பிரச்சினை இருந்திருக்கிறது. இப்பிரச்சனையில் கோபால் மற்றும் சரஸ்வதி சுருளிக்கு எதிர்தரப்பினருக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இன்று காலை சரஸ்வதியின் கணவர் கோபால் வேலைக்கு சென்ற உடன் வீட்டிற்குள் சென்று கையில் தயாராய் வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி உள்ளார்.இதில் காயமடைந்த சரஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுருளியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.