கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் அருகே வாலிபர் வெட்டி படுகொலை. கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு ஆறாவது பிளாக்கில் வசித்து வரும் முகிலன் என்பவரது மகன் இன்பரசன். 18 வயதான இவர் பிளம்பிங் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று மதியம் ஹவுசிங் யூனிட் பகுதியில் அவரும் அவரது நண்பர்களும் நின்று கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் இன்பரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி ஓடினர்.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போத்தனூர் காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.