• Tue. Mar 21st, 2023

ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்து பதிவிட்ட வாலிபர் கைது

தலைமை தளபதியின் இறப்பின் பின்னணியில் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக பொய் செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பியது தொடர்பாக குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளன்.

சைபர் கிரைம் போலீசார் ஷிபினை கைது செய்ததோடு சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்புதல், சமூக வலைதள குழுவில் கலகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் (153A, 505/1 b, 504 ) வழக்கு பதிவு செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *