• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மறைந்த முப்படை தளபதிக்கு பாரத் ரத்னா… படுகதேச பார்டி கட்சி கோரிக்கை

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதிக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமென்று படுகதேச பார்டி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து படுகதேச பார்ட்டி கட்சி நிறுவனர் மஞ்சை மோகன் பிரதமருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய திருநாட்டின் பாதுகாப்பின் தலைமகன், இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி…
ஜெனரல். பிபின் ராவத் பெருமகனார் பணியில் இருக்கும்போது 08-12-2021 அன்று வீரமரணம் அடைந்து தேச மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்…

இந்திய திருநாடு அவரது இழப்பை தாங்க முடியாத சோகத்தில் உள்ளது என்பதனை அறியும் போது அவரின் மேல் நமது இந்திய திருநாட்டின் மக்கள் எவ்வளவு பேரன்பு வைத்துள்ளார்கள் என்பதனை அறியமுடிகிறது.

இத்தகைய புகழ்மிக்க முப்படைகளின் முதல் தலைமை தளபதி. ஜெனரல். பிபின்ராவத் பெருமகனாரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக இந்திய தேசத்தின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதினை வழங்கி கௌரவிக்க வேண்டுமாய் மாண்புமிகு.இந்திய பிரதமர் அவர்களை மெத்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்..

இதன் மூலம் பெருமகனாரின் தன்னலமற்ற சேவையினை , இந்திய திருநாடு மக்கள் மட்டுமில்லாமல் , உலக மக்கள் அனைவரும் போற்றி புகழ்ந்திடும் நிலை உருவாகும் என்பதால் மாண்புமிகு. இந்திய பிரதமர் அவர்கள் ,
இந்திய திருநாட்டின் மக்களின் கோரிக்கையாக, இதனை கனிவுடன் பரிசீலிக்கும் படி மெத்த பணிவன்புடன் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.