சென்னையில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 47,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின. இதனிடையே, துருக்கியை தொடர்ந்து இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்தியாவின் பல பகுதியில் நிலநடுக்கம் அவ்வப்போது சிறிய அளவில் உணரப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.