• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கார் பேரணி…!

Byஜெ.துரை

Feb 23, 2023

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப் 26) தேசிய சங்கம் மற்றும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் பார்வையற்றோருக்கான 32வது கார் பேரணியானது நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து தொடங்கும் இந்த பேரணியில், ஒவ்வொரு காரிலும் ஒரு கண் பார்வை திறனற்றோர்க்கு வழிகாட்டியாக ஒருவர் இருப்பார் எனவும் அவரின் உதவியுடன் பிரெய்லி வரைபடத்தின் மூலம் முறையான வழிமுறைகளை கொடுத்து பேரணிக்கான பாதையில் வழிநடத்தி செல்ல உதவி செய்வார்கள் எனவும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அமீர் அரோரா தெரிவித்துள்ளார்.
போட்டி பங்கேற்பாளர்கள் தங்களின் செயல்முறையை பற்றி தெளிவாக கற்றுக்கொள்ள வருகிற சனிக்கிழமை அன்று சோதனை பேரணியானது நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.