• Tue. Feb 18th, 2025

கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா

ByG.Suresh

Jan 13, 2025

சிவகங்கை கலைஞர் அறிவாலயத்தில் ஒன்றிய செயலாளர் M.ஜெயராமன், B.A.,B.L., தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!!

சிவகங்கையில் பொங்கல் விழாவை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய சார்பில் சிவகங்கை காலேஜ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சிவகங்கை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் M. ஜெயராமன்., B.A.,B.L., தலைமையில் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழா கொண்டாடினர். கழகத் தொண்டர்கள், மகளிர் அணி தொண்டர்கள் அனைவரும் பாரம்பரிய முறையில் வேஷ்டி, சேலை அணிந்து சமத்துவ பொங்கலிட்டனர்.

கலைஞர் அறிவாலயம் முழுவதும் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டது. மேலும் மருத்துவக் கல்லூரி அருகேயும் , கலைஞர் அறிவாலய அலுவலக முன்பு கழக கொடியினை தெற்கு ஒன்றிய செயலாளர் M.ஜெயராமன் அவர்கள் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கொட்டகுடி பஞ்சவர்ணம், சித்தலூர் முருகன், ஒன்றிய பொருளாளர் பாண்டியராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சிங்கமுத்து, மாவட்ட பிரதிநிதி மனோகர் சுவாமிநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் தங்கம் என்ற செல்வம், இளைஞரணி துணை அமைப்பாளர் அழகு சுந்தரம், மாவட்ட மகளிர் அணி மார்க்கெட் கமலா, தொண்டரணி ராஜேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி செல்வராணி, தங்கச்சாமி, முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வேல்முருகன், வாணியங்குடி தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.