• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காட்டுநாயக்கர் சமூகத்தினர் சார்பில் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Jun 16, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில். காட்டுநாயக்கர் சமூகத்தினர் சார்பில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பங்கேற்ற அமைச்சர் சி பி ஆர் க்கு அந்த சமூக மக்கள் பழங்குடியினர் போல் மலைவாழ் பழங்குடியினர் போல் சேலை அணிந்து தலையில் கோழி இறகுகள் வைத்து மலர்கள் தூவி குடுகுடுப்பு அடித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதல்வர் விஜயின் பாட்டுக்கு ஏற்றார் போல் ஆடிக்கொண்டு அமைச்சருக்கு கும்பம் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேசும்போது: உங்களை பார்க்கும் போது முழு நம்பிக்கை வந்துள்ளது. எப்போதும் எங்களுடன் இருப்போம் என்றீர்கள் நாங்களும் உங்களுடன் எப்போதும் இருப்போம் தேனியில் வனத்துறை அதிகாரிகளை சந்தித்து பழங்குடியினரை தொந்தரவு செய்ய வேண்டாம் அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். நீங்கள் தான் இயற்கையை காப்பாற்றுபவர்கள் இனிமேல் உங்களுக்கு எந்த தொந்தரவு வராது.

சாதி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சான்றிதழ் பெற்று தரப்படும் உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக என்னை அழையுங்கள். உங்களுக்கு ஏதும் தேவைப்பட்டால் என்னை நீங்கள் கூப்பிடுங்கள் நான் வருகிறேன் மண்டபம் எல்லாம் பிடிக்க வேண்டாம் பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்றார்.