• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி துவக்கம்..,

ByP.Thangapandi

Jun 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று முதல் துவங்கி உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வருவாய் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நலத்திட்ட உதவிகள் கோரிக்கைகள் மனுக்கள் மற்றும் நில உடமைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் நேரில் கொடுத்து அதற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி வருவாய் தீர்வாயத்தின் முதல் நாளான இன்று கருமாத்தூர் உள் வட்டம், 17 ம் தேதி வாலாந்தூர் உள்ள வட்டம், 18 ம் தேதி சிந்துபட்டி உள்வட்டம், 19 ம் தேதி உத்தப்பநாயக்கனூர் உள் வட்டம், 23 ம் தேதி உசிலம்பட்டி உள் வட்டம் என 5 உள் வட்டங்களில் மொத்தமாக 54 கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சிகள் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளில் கருமாத்தூர் உள் வட்டத்தில் உள்ள கருமாத்தூர், முதலைக்குளம், விக்கிரமங்கலம், கோவிலாங்குளம் உள்ளிட்ட 10 கிராம பகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது.

இங்கு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய உத்தரவுகள் உடனடியாக பிறப்பிக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் சார் ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.