பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற மே 5ஆம் தேதி கடைசி நாள் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பெண்களுக்கான உதவி மையத்தில் பணியாற்ற தகுதி உடையவர்கள் வருகின்ற மே ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கான உதவி மையம் அமைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் மாத ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் மே ஐந்தாம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை ராஜாஜி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எட்டாவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.