தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் புதிய பொருளை வழங்க உள்ளதாக கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை பொறுத்தவரை உணவு மற்றும் கூட்டுறவுத் துறை என்பது உயிர் நாடி போல. நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்கிறோம்.
மேலும், தமிழகத்தில், நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், இதனால், தமிழ்நாடு முழுவதும் கேழ்வரகு உற்பத்தியை பெருக்க முடியும் எனவும் கூறினார்.