• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கொய்யா தோட்டத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!!

Byமகா

Jul 30, 2025

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கொய்யா தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் வழக்கம்போல் பணியாளர்கள் கொய்யாக்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கொய்யா மரத்தடியில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கொய்யா தோட்டத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த வனத்துறையினர் கொய்யா மரத்தில் பதுங்கியிருந்த மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.