• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

பொள்ளாச்சி அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி வடக்கிபாளையம் சாலையில் மகாலிங்கபுரம் போலீசார் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ் மணி உத்தரவின்பேரில் மகளிர் காவல் நிலையஉதவி ஆய்வாளர் கௌதம்,எஸ் எஸ்.ஐ பால கணேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் பொள்ளாச்சி மகாலிங்க புரம் பகுதியில் தொடர்ந்து 4 பூட்டிய வீடுகள் மற்றும் ஒக்கிலிபாளையம் கோயில் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஷாஜகான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷாஜகானை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கேரளாவைச் சேர்ந்த ஷாஜகான் மீது கேரளா மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.