• Thu. Mar 30th, 2023

தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தனியார் கல்லுாரியில் நடந்த மாவட்டங்களுக்கு இடையேயான ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தேனி மாவட்ட வீரர், வீராங்கனைகள் 16 பதக்கங்களை வென்றனர்.


நீளம், உயரம், ஈட்டி எறிதல், குண்டு, தட்டு மற்றும் ஒட்டப் போட்டிகளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 14 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 14 பேர் பதக்கம் வென்றனர். இதில் 3 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 16 பதக்கங்களை ஒட்டு மொத்தமாக குவித்து, தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.


பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகள் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தலைமையில் மாவட்ட தடகள சங்க செயலாளர் அஜய் கார்த்திக் ராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், செந்தில், தேவராஜன் ஆகியோர் கலெக்டர் முரளீதரனை சந்தித்து பாராட்டு பெற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *