மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் போன்ற செயலிகளை பயன்படுத்தாதவர்கள் வெகு சிலரே உள்ளனர். இதன் காரணமாகவே இந்த செயல்களில் ஆபத்துகளும் நிறைந்து விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மக்கள்களையும் செயலிகளையும் கவனமாக கையாள வேண்டும் என நிறுவனங்களும் வல்லுனர்களும் எச்சரித்து வருகின்றனர். தற்போது பேஸ்புக் பக்கத்தில் புது மோசடிகள் ஒன்று தலை தூக்கி உள்ளது.
இது வேகமாக பரவி வருவதால் இதிலிருந்து நம் முகநூல் கணக்கை தற்காத்துக் கொள்வது அவசியம். போதிய தற்காப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாக நிறுவனம் எச்சரிக்கை விட்டுள்ளது. மேலும் மோசடி செய்பவர்கள் ஒருவரின் மரணச் செய்தியை பயன்படுத்தி யூசர்களை ஏமாற்றுவதற்காக பேஸ்புக்கில் ஒரு மோசமான யுத்தியை பயன்படுத்தி இருக்கின்றனர்.
யார் இறந்துவிட்டார்கள் என்று பார் என்ற தலைப்புடன் தொடங்கும் பதிவு சம்பந்தப்பட்டவரின் மரணம் குறித்த கட்டுரை அமைப்பின் பேஸ்புக் பயனர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஐயோ என்ன பரிதாபம் பட்டு நாம் அந்த இணைப்பை கிளிக் செய்தால் அவ்வளவுதான், நம்முடைய கணக்கு கிளிக் செய்தால் மோசடி கும்பலிடம் சிக்கிவிடும். மேலும் பணி உரிமை தகவல்களை சில நிமிடங்களில் இழக்க நேரிடும். லுக் டூ டை என அழைக்கப்படும் மோசடியில் பேஸ்புக்கில் வேகமாக பரவி வருகிறது. பயனரின் உணர்ச்சியை தூண்டிவிட்டு இந்த மோசடி அரங்கேற்றப்படுகிறது. மேலும் இது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.