• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

உருவாகிறது புதிய காற்றழுத்தம்…5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை!

ByA.Tamilselvan

Dec 3, 2022

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் டிசம்பர் 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் காற்றுழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும்.கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.