



கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையத்தில் இன்று காலை முதல் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.
அப்பகுதியில் உள்ள அணைக்கட்டில் தேங்கி உள்ள முழுமையான சாக்கடை நீர் மற்றும் ஆகாயத் தாமரை எனப்படும் அடர்ந்த செடி புதர்களுக்குள் குரங்கு ஒன்று சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறது. காலை 6 மணி முதல் குளத்தின் நடுவே இருந்த பட்டுப்போன மரத்தின் மீது அமர்ந்து இருக்கும் அந்த குரங்கு, வெளியேற முடியாமல் தவித்து வருகிறது.


சாக்கடை நீரின் துர்நாற்றம் மற்றும் அடர்ந்த செடிகளால் குரங்கின் நிலை மேலும் கவலை அளித்ததாக அப்பகுதி உள்ளூர் மக்கள் குரங்கின் பரிதாப நிலையைக் கண்டு வேதனை அடைந்தனர். உடனடியாக குரங்கை மீட்க வனத் துறையின் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது. வனத் துறையினர் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுத்து குரங்கின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தகவல் அறிந்த அங்கு வந்த வனத்துறையினர் குரங்கு நீரில் இருந்து கடந்து வர நீரில் மிதக்கும் வகையில் உபகரணங்களை கொண்டு பாதை அமைத்தனர், தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அந்தக் குரங்கு அந்தப் பாதையை பயன்படுத்தி நீர் நிலையை விட்டு வெளியேறியதாகவும், மேலும் அந்தக் குரங்கு நன்றாக நீந்தி செல்வதும் பார்க்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வனத்துறையினர் அதனை பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

