• Mon. Apr 28th, 2025

தொழிலதிபர் மகனை கடத்திய டிரைவர் மீது குண்டர் சட்டம்..,

BySeenu

Apr 11, 2025

கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் . தொழில் அதிபரான இவரது மகன் ஜெயசூர்யா ( 11) பள்ளி மாணவன்.ஸ்ரீதர் வீட்டில், திருப்பூர் மாவட்டம் மாவட்டம், காங்கேயம் அடுத்த முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன்( 25) கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 15 ஆம் தேதி ஜெயசூர்யாவை, டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வர டிரைவர் நவீன் காருடன் சென்றார்.

மாலை, 5 மணிக்கு மேலாகியும், மகன் வீடு திரும்பவில்லை. டிரைவர் நவீனை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. இந்நிலையில் கார் டிரைவர் நவீன், ஸ்ரீதருக்கு போன் செய்து, ஜெயசூர்யாவை கடத்தி சென்று உள்ளதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும், பணம் தரவில்லை எனில், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் .

கிருத்திகா துடியலுார் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், நவீன் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிறுவனுடன் இருப்பது தெரிந்தது. கோவை போலீசார், ஈரோடு பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பவானி போலீசார் நவீனை கைது செய்து, கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து டிரைவர் நவீன் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில் டிரைவர் நவீன் ஜாமீன் மனு கோவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் நவீன் ஜாமீன் மனுவை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.இந்நிலையில் தொழிலதிபர் மகனை கடத்திய டிரைவர் நவீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டிரைவர் நவீனிடம் வழங்கப்பட்டது.