• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் RUN FOR வைப்பாறு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி..,

ByK Kaliraj

Jul 26, 2026

சாத்தூரின் அடையாளமாக உள்ளது வைப்பாறு நதி ஆகும். இந்த நிலையில் வைப்பாறு நதி கடந்த சில ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் அடர்ந்து மிகவும் மாசடைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் மாசடைந்து காணப்படும் வைப்பாறு நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக சாத்தூரில் RUN FOR வைப்பாறு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த மராத்தான் போட்டி ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

மேலும் இந்த மராத்தான் போட்டியை சாத்தூர் DSP குருசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் அழிந்து கொண்டிருக்கும் வைப்பாறு நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில் ஆண்கள் பெண்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் என சுமார் 4000க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.