• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு நினைவுப் பரிசு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேச்சு..,

ByKalamegam Viswanathan

Jul 26, 2026

மதுரை பாண்டியன் நகர் ஸ்ரீமான் எஸ் ஆர் வி மக்கள் நல மன்றம் சார்பில் திருநகர் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாண்டியன் நகர் பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பங்கேற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கேடயத்தையும் நினைவு பரிசும் உதவித்தொகையும் வழங்கினார்.

தொடர்ந்து மாணவர்கள் இடையே பேசிய அமைச்சர் நிர்மல் குமார்
​மாணவர்களுக்கு தேவையான ஊக்கமும், அவங்களுக்கு ஒரு நல்ல ஒரு திட்டமும் நம்ம கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏன்னா மாணவர்கள் இன்றைக்கு கடுமையான ஒரு போராட்டத்துலயும், கடுமையான ஒரு காம்படிஷன்லயும் இருக்காங்க.

கண்டிப்பா நல்லா படிக்கிற மாணவர்கள் எல்லா இடத்துலயும், எல்லா பள்ளிகளிலுமே இருக்காங்க. அவங்களுக்கு தேவையான ஊக்குவிப்பை கொடுக்கணும்னு நினைச்ச அனைவருக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்ச அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

​மாணவர்களுக்கு கண்டிப்பா இன்றைக்கு நல்ல ஒரு ஸ்பேஸ் இருக்கு. நல்ல ஒரு காம்படிஷன் இருக்கு. அவங்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை உருவாக்குறதுக்கு நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் எல்லா துறைகளிலும் வேலை பார்த்துட்டு இருக்காங்க.

கண்டிப்பா விரைவில் உங்களுக்கு நல்ல ஒரு வேலைவாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தும்.
​நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் நல்ல ஒரு கல்வியை பயின்று, வெற்றிகரமாக உங்களுடைய அடுத்த வாழ்க்கையை தொடங்க என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நாளை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாரின் பிறந்தநாள் விழா என்பதால் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.