• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பிரபல பீடி தயாரிப்பு கம்பெனியின் பெயரில் போலி பீடி தயாரித்து விற்பனை செய்த நபர் கைது..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2023

மதுரை டிவிஎஸ் நகர்ப்பகுதியை சேர்ந்த முகமது அப்துள்ளா என்பவர் பிரபல பீடி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரின் கிளை நிறுவனமான செனாய் டிரேடர்ஸ் மூலம் பீடிகளை உற்பத்தி செய்து மதுரை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மங்களூர் கணேஷ் பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவரும் அவினாஷ் பரமேஸ்வர் நாயக் என்பவர் தங்களது தயாரிப்பு பீடிகள் தத்தனேரி, செல்லூர் பகுதிகளில் தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக பீடிகளை தயாரித்து சிலர் விற்பனை செய்துவருவதாக புகார் தெரிவித்தார். தொடர்ந்து மதுரை செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் போலி பீடி களை தயாரித்து அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவர மதுரை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த போலி பீடி கட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.