• Tue. Mar 25th, 2025

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கிராமப்புற மக்களுக்காக கிராம குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு…

ByKalamegam Viswanathan

Sep 2, 2023
      மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை பரிசோதனை செய்து, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளை சார்ந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கிராம குடிநீர் திட்ட (TWAD)நிர்வாக பொறியாளர் செந்தில் குமரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன் /ராம்குமார்  கலந்து கொண்டனர். மெர்குரி மகளிர் குழுவைச் சார்ந்த அன்புச்செல்வி, வாசுகி உட்பட மகளிர் குழுவினர் ஏராளமான கலந்துகொண்டு விளக்க பயிற்சியை அளித்தனர. இதில் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர்கள் தங்களுடைய சந்தேகத்திற்கு இடமான கேள்விகளை அதிகாரிகளிடம் அறிந்து கொண்டனர். ஆங்காங்கே ரசாயன கலந்த (R.0) விற்பனை செய்வதை அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை குறித்தும் பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கிராமங்களில் கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் அதன் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைப்பது குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டன.