பல்லடம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மது போதையில் கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை….
காரணம் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை .
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் 39. கூலித் தொழிலாளியான அசோக் குமார் தனது மனைவி புஷ்பா மற்றும் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான அசோக்குமாருக்கும் அவரது மனைவி புஷ்பாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மது போதையில் அசோக் குமார் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.