• Thu. Mar 28th, 2024

பத்து ரூபாய் காயின் செல்லாது நடத்துனர் – பயணிகளிடையே அதிர்ச்சி

ByKalamegam Viswanathan

Mar 6, 2023

திருச்சியில் ரூ10நாணயம் செல்லாது என நடத்துனர் கூறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபோன்ற நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து TN45BD3377 இந்த என் கொண்ட தனியார் பேருந்தில் திருச்சி ரயில் நிலையம் செல்வதற்காக பஸ்ஸில் ஏறி உள்ளார் மூன்று பத்து ரூபாய் நோட்டும் ஒரு பத்து ரூபாய் காயினும் கொடுத்துள்ளார் அதற்கு அந்த நடத்துனாரோ 10 ரூபாய் காயின் எல்லாம் இங்கே செல்லாதுங்க அப்படின்னு சொல்லிட்டாரு உடனடியாக அந்த பயணி ரிசர்வ் வங்கி அப்படி எல்லாம் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லையே ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதெல்லாம் தெரியாது நான் வாங்க முடியாது என கரராக கூறிவிட்டார் ஏற்கனவே ரிசர்வ் வங்கியானது இதுபோன்று பத்து ரூபா நாணயங்களை வாங்க மறுக்கும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது இந்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த வேறு வழி இன்றி சில்லறைகளை பொறுக்கி அவரிடம் கொடுத்து விட்டு அந்தப் பயணி பத்து ரூபா காயினை வாங்கி வைத்துக்கொண்டார் .


ரிசர்வ் வங்கி ஏற்கனவே பலமுறை பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது அதையும் மீறி திருச்சியில் பல தனியார் பேருந்துகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது இது குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகமும் மற்றும் காவல் துறையும் போக்குவரத்து நிர்வாகம் வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக அறிவியல் கோரிக்கையாகவே உள்ளது நடவடிக்கை எடுக்குமா ரிசர்வ் வங்கி நிர்வாகம் மற்றும் காவல்துறை மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *