• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல்

ByP.Thangapandi

Dec 17, 2024

பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் செய்த பின் பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் – உசிலம்பட்டியில் கையும் களவுமாக பிடித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் 3 பெண்களை கைது செய்தும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி, தனது மகன் முருகனுக்கு பெண் பார்ப்பதற்காக புரோக்கர் மூலம் தேடி உள்ளார்., அந்த வகையில் புரோக்கராக அறிமுகமான பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா, பெண்களை அழைத்து வந்து திருமணம் முடித்த அன்றே பணம் நகைகளை கொள்ளையடித்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இரு பெண்களை அழைத்து வந்து ஏமாற்றிய விஜயா மீண்டும் கடந்த சனிக்கிழமை அருணா தேவி என்ற பெண்ணை அழைத்து வந்து திருமணம் முடித்து வைப்பதாக கூறியும், புரோக்கர் கமிசனாக 1 லட்சம் வரை கேட்ட நிலையில் சுதாரித்துக் கொண்ட பெருமாயி, இந்த கும்பலை கையும் களவுமாக உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நூதன மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா, கோவில்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டை -யைச் சேர்ந்த அருணா தேவி மற்றும் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா, முரளிதரன் என்ற 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயா, காளீஸ்வரி, அருணா தேவி என்ற மூன்று பெண்களை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் முடிந்த கையோடு பணம் நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.