
புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் இந்திய ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கியது.
இது ஏராளமான பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் சமூக நல ஆர்வலர்கள் வணிகர் சங்க பிரதிநிதிகள் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான தேசிய கொடியை கையில் ஏந்தி கீழ ராஜ வீதி வழியாக ஊர்வலமாக வந்து நகர்மன்ற கட்டிடத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் பேரணியில் குழந்தைகள் மாணவிகள் மாணவர்கள் ஆகியோர் தேசிய தலைவர்களின் வேடம் அணிந்து ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.
மேலும் ப்ரோமோஸ் அக்னி ஆகிய ஏவுகணை மற்றும் விமானங்கள் மாதிரிகளை ஆகியவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. ஊர்வலத்தில் தேசிய கீதம் மற்றும் தேச பக்தி பாடல்கள் இசைத்தபடி பொதுமக்கள் நடந்து வந்தனர்.
மேலும் ஊர்வலத்தில் பாஜக நிர்வாகிகள் சீனிவாசன் சோபன்பாபு புரட்சிக் கவிதாசன் ஜீவானந்தம் முருகானந்தம் பழ செல்வம் சண்முகசுந்தரம் மதிவாணன்உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை நகர காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வெளியிட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
