புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பொம்மாடிமலை புனித ஆரோக்கிய அன்னை ஆலய 43 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இப்பவனி விழாவில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள பொம்மாடி மலை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் மிக சிறப்பு மிக்க ஆலயமாக திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் 43 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 21.5.2025- அன்று கொடியேற்றம் துவங்கப்பட்டு தினமும் ஆரோக்கிய அன்னையின் திருப்பலி நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி விழா பொம்மாடி மலைபகுதியை சுற்றி உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி புனித ஆரோக்கிய அன்னையை வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.