• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி..,

ByP.Thangapandi

Aug 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 32 ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.,

அதிக சத்ததுடனும், துல்லியமாகவும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி மூலம் பழைய பாடல்களை ஒளிக்க செய்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.,

மேலும் அழிந்து வரும் ஒலிபெருக்கி அமைப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உதவிகளை செய்ய இது போன்ற போட்டிகளை நடத்தி வருவதாகவும், அரசு ஊக்கப்படுத்தும் பட்சத்தில் பழைய பாடல்களும், பாரம்பரிய கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளும் மீட்டெக்கும் போது ஒலிப்பெருக்கி அமைப்பாளர்களின் வாழ்க்கை தரமும் உயரும் என தெரிவித்தனர்.,