• Sat. Feb 15th, 2025

நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…

ByG.Suresh

Jan 30, 2025

நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து. வின்னைமுட்டும் அளவிற்கு எழுந்த புகை. குடியிருப்பு வாசிகள் அவதி.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், வின்னை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் எழுந்த நிலையில், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

சிவகங்கை நகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட பகுதி காளவாசல். இந்த பகுதியில் நகராட்சி நிர்வாக சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கின் அருகிலேயே மேல் நிலை நீர் தேக்க தொட்டி நகராட்சி பள்ளி, மற்றும் ரேசன் மண்ணெண்ணை பல்கும் செயல்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கு சாலையை ஒட்டி செயல்படும் நிலையில் அங்கு அடிக்கடி சமூக விரோதிகள் தீ வைத்து செல்வதால் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இன்று மாலையும் அதேபோல் சமூக விரோதிகள் தீ வைத்து சென்றதால் வின்னை முட்டும் அளவிற்கு அங்கிருந்து புகை கிழம்பி அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு தினறல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன் பெரிய அளவிலான தீவிபத்து அபாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயனைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அனைக்க போராடி வருகின்றன.

இருந்த போதிலும் தீயை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. இதற்கிடையே தீயனைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்ததன் காரணமாக மீண்டும் வாகனம் வெளியில் தண்ணீர் நிரப்ப சென்றது. தீயனைப்பு துறையினர் மீண்டும் போராடி வரும் நிலையில் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் அந்த குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற கோரிக்கைவிடுத்துள்ளனர்.