


தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான தீப்பெட்டி செய்யும் மெஷின் முற்றிலும் எரிந்து சேதமாகியது.
சாத்தூரில் மது சூதனதுக்கு சொந்தமான ஸ்ரீ அம்மன் மேச் ஒர்க்ஸ் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான தீப்பெட்டி செய்யும் மெஷின் முற்றிலும் எரிந்து சேதமாகியது.



மேலும் இந்த தீ விபத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலையில் தற்போது தீ பற்றி எரிந்து வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூர் தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

