விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில்,
பியூச்சர் மோட்டார்ஸ் என்ற பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. நேற்று இரவு இந்த கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

தீப்பிடித்த பகுதியில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.