வேலூர் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் போட்டியிடும் சிவசங்கரி பரமசிவம். இவருடைய கணவர் பரமசிவம் வாழையடி வாழையாக சுமார் 30 ஆண்டுக்கு மேல் தன்னார்வத் தொண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 2001ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை துணைத் தலைவர் தலைவர் என்று பதவி வகித்தவர்.
பின்னர் பேரூராட்சியில் தலைவராக நிரந்தரமாக்கி கொண்டார். இவர் செய்த சேவைகளும் மக்களுடைய இவருக்கு இருக்கும் நற்பெயரும் அதிகம் அதனடிப்படையில் அதிகமான தேவையான பிரச்சனைகளான மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டும், அது செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் துணைவியாரை மாமன்ற உறுப்பினர் இருக்கு போட்டியிட செய்தார்.
அவ்வாறு போட்டியிடும் மக்களுக்கு, வாக்குறுதிகள் தன்னுடைய கணவர் பொறுப்பில் இருந்த போது கொடுத்த வாக்குறுதிகள்படி. சிமெண்ட் சாலை மற்றும் குடிநீர் கால்வாய் வசதி குப்பைகள் இல்லாத பேரூராட்சி என்ற தூய்மை திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
அதேபோல் எக்சோரா திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதன்முதலில் வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தியவர். இதனை, அண்டை நாடான பாகிஸ்தான் குழு வந்து பார்வையிட்டு பாராட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று சிவசங்கரி பரமசிவம் அவர்கள் தன்னுடைய வார்டில் வாக்குறுதியாக கொடுத்துள்ளார்.
மேலும் தன் பிள்ளைகளை மக்கள் சேவை செய்வதற்கேற்ப மேல் படிப்பு படிக்கச்செய்துள்ளார்!இப்படிப்பட்டவர்கள் மேயர் ஆனால் கண்டிப்பாக வாழும் பகுதி செழிப்புடன் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்..
