• Fri. Mar 29th, 2024

ஆபத்தான முறையில் போடப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு

நீலகிரி மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அருவிகள், அணைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாயங்கள் நிறைந்து காணப்படும் ஊர்.அழகிய மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவது வாடிக்கையாகி வருகின்றன. பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக கிராமங்களில் உள்ள அழகிய சுற்றுலா தலங்களை டிஜிட்டல் போர்டுகளாக சாலை ஓரங்களில் கம்பீரமாக நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அறிவிப்பு பலகைகள் சுற்றுலா இடங்கள் வழிகாட்டிகளாக பெரிய பெரிய போர்டுகளாக வைக்கப்பட்டு வருகின்றன .

உதகியிலிருந்து மஞ்சூர் நோக்கி வரும் கைகாட்டி என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டு அமைத்து இரண்டு தினங்களிலேயே அடிப்பகுதியில் குறைவாக போடப்பட்டிருந்த சிமெண்ட் பெயர்ந்தும் ஆழமான குழிகள் காணப்படுவதால் சிறிய காற்றுக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல் வாகனங்கள் மீது அல்லது பொதுமக்கள் மீது விழுந்து மண்டை உடையும் அபாயம் உள்ளது. அலட்சியமாக போடப்பட்டுள்ள போர்டு முறையாக போட வேண்டும் இல்லையென்றால் மண்டை உடைவது நிச்சயம் என்று புலம்பி வரும் பொதுமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *