கனமழை காரணமாக நீலகிரி பகுதியில் மண் சரிவு காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிண்ணகொரை சாலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக மரம் விழுந்தும் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சாலையில் கிடந்த மரத்தை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு அகற்றி சாலைகள் கிடந்த மண் திட்டுக்களையும் அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது