• Fri. Mar 29th, 2024

பூமியை நோக்கி வேகமாக வரும் ஆபத்தான சிறிய கோள்!!

ByA.Tamilselvan

Oct 26, 2022

ஆபத்தான சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி மிகவேகமாக வந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய மண்டலத்தில் உள்ள பூமியை லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. சூரிய குடும்பத்தில் சுமார் ஒரு லட்சம் சிறுகோள்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. சூரிய குடும்பத்தின் ஆரம்பகால அமைப்பிலிருந்து எஞ்சிய, பாறை வடிவம்தான் இந்தச் சிறுகோள்கள். அந்த வகையில், “பைத்தான்” என்ற ராட்சத சிறுகோள் பூமியை நோக்கி மிக வேகமாக வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிறுகோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் உள்ளது. இந்த சிறுகோளானது வருகிற 2028ஆம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் சிறுகோள் கடந்து செல்ல உள்ளதால் இது “டெஸ்டினி பிளஸ்” என்ற விண்கலத்தின் கண்காணிப்பில் உள்ளது. இந்த நிலையில், “பைத்தான்’ சிறுகோளின் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.6கோடி ஆண்டுகளுக்குமுன் இதேபோன்ற சிறய கோள் மோதியதால் தான் டைனோசார் போன்ற மிக பிரண்டமான உயரினங்கள் பூமயில் அழிந்துபோனது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed