எஸ் ஜாகிர் உசேன்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெத்தை பெரும்பள்ள பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த நான்கு பேர் காயங்களோடு முள்ளி மருத்துவமனையில் அனுமதி ப்பட்டுள்ளனர்.
மஞ்சூர் பகுதியில் இருந்து கட்டிடத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கோவைக்கு செல்வதற்காக ரவி (எ) கோயக் குட்டி கட்டிட காண்ட்ராக்டராக பணியாற்றி வருபவர் TN38 BL 6588 பதிவு எண் கொண்ட தனது வாகனத்தில் நண்பர்கள் சதீஷ்குமார் ஓணி கண்டி அருண் பெரியார் நகர் அருண் கொற்ற கண்டி ஆகியோருடன் பொருட்கள் வாங்க கோவை சென்ற பொழுது கெத்தை அடுத்த பெரும்பள்ளா பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் முள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மேல் சிகிச்சைக்காக கோவை காரமடை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுனர் ரவி (எ) கோயகுட்டி சபரிமலைக்கு சென்று இன்று காலை தான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








