• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஜிஎஸ்டி சாலையில் பழுதாகி நின்ற லாரி..,

ByR.Arunprasanth

May 6, 2025

சென்னை பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றது இதனால் சென்னை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து பாதிப்பானது. தற்போது ஏற்பட்டு வருகின்றது.பழுதாகி நின்ற வாகனத்தை அப்புறப்படுத்த பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.