• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டி 20 உலககோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

ByA.Tamilselvan

Nov 6, 2022

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 பிரிவின் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆனால், ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்தின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா ரன் எடுக்க முடியாமலும், விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தும் தடுமாறியது. இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றிபெற்றது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.