• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் இன்று (04.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று (04.11.2022) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (4.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04.11.2022) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (04.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.