• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் – மனுதாக்கல் நாளை மறுநாள் தொடக்கம்

ByA.Tamilselvan

Nov 3, 2022

குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரை அவரது ஆட்சி காலம் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வந்தது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த காலங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது.
இன்று மதியம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த பேட்டியில் :- குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இந்த 89 தொகுகளிலும் நாளை மறுநாள் (நவம்பர் 5-ந் தேதி) வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 5-ந் தேதி 2-ம் கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது என தெரிவித்துள்ளார்.