• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதும், சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பெய்வதுமாக இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நீலகிரி, கரூரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.