• Mon. Oct 26th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

டாக்டர், செவிலியர், மருந்தாளுநர்கள் பற்றாகுறை, அடிப்படை வசதி குறைவு காரணமாக ஆர்பாட்டம்..,

ByPrabhu Sekar

Oct 26, 2026

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள், மருத்தாளுநர்கள், பிணவறை ஊழியர்கள் பற்றாகுறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தாம்பரம் ரத்த வங்கி தலைவரும் சமூக ஆர்வலர் S.முருகன் தலைமையில் 25 பேர் மருத்துவ மனை வளாகத்தில் திரண்ட நிலையில் கோரிக்கை அடங்கிய விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி மருத்துவ மனையில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் அதிகரிக்க கோரினார்,

இந்த தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட கூடாது என் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது,

இதனையடுத்து கோரிக்கைகளை மனுவாக எழுதி மருத்துவமனை தலைமை மருத்துவர் சீனிவாசனிடம் இனிப்பு, பழத்தட்டுடன் அளித்து கோரிக்கையை நிறைவேற்ற கோரினார்கள்.

இதனால் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது