

தமிழகத்திற்கு தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல்கள் உருவாக வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வானிலை மையம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியவுடன் தமிழகத்தில் பரவலாக கன மழை, மிக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வருகிற 10-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் பெரும்பாலும் காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
