• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டுவிட்டரை வாங்கியதும் முதல் வேலையாக உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்த மஸ்க்

ByA.Tamilselvan

Oct 28, 2022

எலன்மஸ்க் டுவிட்டரை வாங்கியதும் முதல்வேலையாக சிஇஓ பராக்அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி .உள்ளது.
ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.