• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரைமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவிலில் வருகின்ற 17-ந் தேதி மகா கும்பாபிஷேகம்..,

ByKalamegam Viswanathan

Sep 1, 2026

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 17-ந்தேதி (புதன் கிழமை) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோவிலின் கம்பிரமான ராஜகோபுரங்களில்புனித நீர் ஊற்றி
மகா கும்பாபிஷேகம்கோலகலமாக நடக்கிறது கடந்த 1983 ஆண்டுக்குமுன்பு வரைமதுரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் கோவில் நிர்வாகத்துடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணைந்து செயல்பட்டு வந்தது. அந்த காலத்தில் மீனாட்சி அம்மன்,சுந்தரேசுவரர் கோவிலில்நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைஅம்பாளுடன் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்ததாக கூறப்படுகிறது.

அதே போல கடந்த 1983 ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது தனி நிர்வாகம் அந்தஸ்து பெற்று செயல் பட்டு வந்த நிலையிலும்மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர்கோவிலில் அடுத்தடுத்து நடந்த மகாகும்பாபிஷேகத்திலும்தெய்வானைஅம்பாளுடன்சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிபக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற 17-ந் தேதிமதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர்கோவிலில் நடைபெறக்கூடியமகா கும்பாபிஷேகத்திலும் சுப்பிரமணியசுவாமி தெய்வானைஅம்பாள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இதனையொட்டி வருகின்ற 16-ந் தேதி (செவ்வாய் கிழமை) காலை 9.30 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தனது தாய் தந்தை வீற்றிருக்கும்மீனாட்சி பட்டணத்திற்கு புறப்பட்டுவருகிறார். இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சிஅம்மன், சுந்தரேசுவரர் கோவில் வரை வழிநெடுகிலுமாக திருக்கண் அமைத்து முருகப்பெருமான்,தெய்வானை அம்பாளை வரவேற்று பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இந்த நிலையில் 16-ந் தேதி இரவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது இதனை தொடர்ந்து
மதுரையில் தெய்வானை அம்பாளுடன் முருகப்பெருமான் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் இதனையடுத்து 17-ந் தேதி அன்று தனது பெற்றோர்களானமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் அருளாட்சி புரியும்கோவிலில் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுதனது தாய், தந்தையின் அருளை பெறுகிறார் பின்னர் அன்று இரவு 7 மணியளவில்மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரரிடம் விடைபெற்றுமதுரையில்நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தபடி தனதுஇருப்பிடமான திருப்பரங்குன்றம் புறப்பட்டு வருகிறார். விழா ஏற்பாடுகளைதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் செய்து வருகிறது

பாக்ஸ் செய்தி – 1
6 மாதத்தில் 3-வது முறையாக

மதுரையில் எழுந்தருளும் குன்றத்து குமரன்

திருப்பரங்குன்றம் கோவிலில்ஒவ்வொரு ஆண்டும்பங்குனி மாதத்தில் நடைபெறும்முருகப்பெருமான் தெய்வானைஅம்பாள் திருக்கல்யாணத்தில் மதுரையில் இருந்துமீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளுவது வழக்கமாக உள்ளது. இதே போலமதுரையில்ஒவ்வொரு ஆண்டும் சித்திரைமாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர்திருக்கல்யாணத்தில் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்துபவளக்கனிவாய் பெருமாள்,தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுத்தருளுவதும் வழக்கமாகும். இதே போல ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் பீட்டு திருவிழாவிற்கு பாணடிய மன்னனாகதிருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் எழுந்தருளுவது விசேஷமாகும்.

இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 28 ந் தேதி மதுரையில் நடைபெற்றமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி நடைபெற்ற பீட்டு திருவிழா ஆகிய 2 நிகழ்ச்சியிலும் வழக்கம் போலதிருப்பரங்குன்றம் கோவிலில் இருந்துதெய்வானை அம்பாளுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதற்கிடையே வருகின்ற 17-ந் தேதி நடைபெறும்மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில்முருகப்பெருமான் பங்கேற்கிறார். ஆகவே இந்த ஆண்டில் கடந்த 6 மாதத்தில் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மதுரைக்குமுருகப்பெருமான் தெய்வானை அம்பாள்எழுந்தருளுவது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.